“வாடா என் மகனே அன்னை என பதவி கொடு”…. மகனின் முதல் பிறந்தநாள்…. உருக்கத்துடன் வீடியோ வெளியிட்ட பூர்ணா…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாடா என் மகனே அன்னை என பதவி கொடு”…. மகனின் முதல் பிறந்தநாள்…. உருக்கத்துடன் வீடியோ வெளியிட்ட பூர்ணா…!!!

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான மஞ்சு போல் ஒரு பெண்குட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

#image_title

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து தமிழிலும் கந்தகோட்டை, ஆடுப்புலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு, கொடிவீரன், காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராகவும் இருந்து வந்தார்.

#image_title

பிசியாக நடித்து வந்த பூர்ணா துபாயை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் பூர்ணாவின் மகனுக்கு இன்று முதலாவது பிறந்தநாள்.

#image_title

மகனின் பிறந்த நாளை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருந்தது முதல் குழந்தை பிறந்தது, பின்னர் வளர்ந்தது என அனைத்தையும் ஒரு வீடியோவாக எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பூர்ணாவின் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in