LATEST NEWS
டேய்…! இந்த கால கொஞ்சம் தூக்கி விடு…. “நடக்க முடியாமல் நடந்து வந்த நடிகர் ராதாரவி”… வைரல் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பேர் போனவர் நடிகர் ராதாரவி. ரகசிய ராத்திரி என்ற கன்னட திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மன்மத லீலை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

#image_title
குரு சிஷ்யன், உழைப்பாளி, வைதேகி காத்திருந்தாள், சின்ன தம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசதி இருக்கிறார். சினிமாவில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். இவரைப் பார்த்தாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வில்லன் கதாபாத்திரம் தான். இந்நிலையில் சமீபத்தில் தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது.

#image_title
இதில் 662 வாக்குகளை பெற்று ராதாரவி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 332 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் ராதாரவி காரில் இருந்து இறங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு இறங்கி வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலானது. இதை பார்த்த பலரும் இவருக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.