LATEST NEWS
அடேங்கப்பா…! மாதம் வாடகை மட்டும் 9 லட்சமா?…. தமிழ் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்….!!!

காதலர் தினம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லேகா வாஷிங்டன். இவர் ஓ மவுரியா என்ற பாடலில் சில நிமிடம் மட்டும் வந்து செல்வார். அதன்பிறகு எஸ் எஸ் மியூசிக் வி ஜேவாக வலம் வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

#image_title
காதலர் தினம் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே, வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். அதற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் பல வருடங்களாக எங்கு சென்றார் என்றே தெரியாமல் இருந்து வந்தது.

#image_title
இந்நிலையில் சமீபத்தில் இவர் பாலிவுட் பிரபல நடிகரான இம்ரான் கான் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வந்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் இம்ரான் கான் 2011 ஆம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் எட்டு வருடங்களில் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
View this post on Instagram
இவரது விவாகரத்துக்கு காரணம் லேகா வாஷிங்டன் தான் என்று பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில் இருவரும் மும்பையில் லிவின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுவும் மாதம் 9 லட்சத்திற்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் வாழ்ந்து வருகிறார்கள் என பல தகவல்கள் பாலிவுட் இண்டஸ்ட்ரியல் பரவி வருகின்றது.