LATEST NEWS
பிரபல பாலிவுட் நடிகரின் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி…. ஜப்பானை தொடர்ந்து இப்போ மும்பையில்…. நியூ அப்டேட்…!!!

சாய் பல்லவி என்பதை காட்டிலும் மலர் டீச்சர் என்று சொன்னால் தான் பலருக்கும் இவரை நினைவுக்கு வரும். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி .அதன் பிறகு தமிழில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

#image_title
இதை தொடர்ந்து மாரி, என் ஜி கே, கார்க்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அமீர்கான் அவர்களின் மகனான ஜூனத் கான் உடன் சேர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

#image_title
அமீர்கான் பாலிவுட்டில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அமீர்கானை தொடர்ந்து இவரது மகன் ஜூனத் கானும் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடித்து வரும் முதல் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஜப்பானில் நடந்து முடிந்துள்ளது.
https://twitter.com/AadhanTelugu/status/1766376534313701480
இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகை சாய் பல்லவி படக்குழுவின் உடன் பாட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ கூட வெளியாகி வைரலாகி வந்தது. இந்த பார்ட்டியில் சாய்பல்லவி குடிக்கவில்லை என்றாலும் டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.