மூன்று வருட பாலைவன கொடூரம்…! “ஆடு ஜீவிதம்” படத்தின் உண்மையான ஹீரோ…. உருக வைக்கும் கதை…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மூன்று வருட பாலைவன கொடூரம்…! “ஆடு ஜீவிதம்” படத்தின் உண்மையான ஹீரோ…. உருக வைக்கும் கதை…!!!

Published

on

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் பிருத்திவிராஜ். இவர் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம். இந்த திரைப்படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கியிருக்கின்றார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

#image_title

கேரளாவில் மிக அதிகமாக விற்பனையான ஆடு ஜீவிதம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் அரபு நாட்டு வேலைக்கு சென்ற போது அங்கு ஒட்டகங்கள் மேய்க்கும் அடிமையாக கொடுமைப்படுத்தப்பட்டார் என்பதும் அங்கிருந்து அவர் எப்படி தப்பி வந்து கேரளா சேர்ந்தார் என்பதை ஒரு நாவலாக எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார்.

இதை மையமாகக் கொண்டுதான் இப்போது இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் உண்மையான ஹீரோ நஜீப் தான். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறுகையில் சவுதியில் மார்க்கெட்டில் வேலை காலியாக இருக்கிறது என்று என்னை ஒருவர் ஏமாற்றி சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement

#image_title

விமானம் மூலம் அங்கு சென்றடைந்த பிறகு ஒருவர் தன்னை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். தூரத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்பதை பார்த்தேன். அங்கு போனதுமே எனக்கு புரிந்து விட்டது தன்னை ஆடு மேய்க்கும் வேலைக்கு தான் அழைத்து வந்திருக்கிறார்கள் என்று, தண்ணீர் இல்லாமல் குளிக்க முடியாமல் ஒரே ஒரு துணியோடு நீண்ட தாடியும் தலைமுடியுடன் சுத்தமில்லாமல் தவித்தேன்.

#image_title

தொடக்கத்தில் எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. இப்படியே என் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று நினைத்தேன். பின்னர் எப்படியோ அங்கிருந்து தப்பி சென்றேன் ஒன்றரை நாள் ஓடி ஒரு இடத்தை அடைந்தேன். அங்கு கேரளாவை சேர்ந்த ஒருவர் ஹோட்டலில் எனக்கு உணவு கொடுத்தார். பாஸ்போர்ட், விசா இல்லாததால் போலீசார் என்னை கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பினார்கள். மும்பை விமானத்திற்கு வந்த பிறகு அங்கிருந்து பணம் எதுவும் இல்லாமல் தவித்தேன். ஒருவர் டிக்கெட் எடுக்க உதவி செய்ததால் சொந்த ஊர் சென்றடைந்தேன். என்று தனது உருகமான கதையை தெரிவித்திருந்தார்.

Continue Reading
Advertisement