நான் போட்ட விதை இன்று மரமாக…. “என் 20 ஆண்டு கனவு இவர்”… ராகவா லாரன்ஸ் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் போட்ட விதை இன்று மரமாக…. “என் 20 ஆண்டு கனவு இவர்”… ராகவா லாரன்ஸ் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ…!!!

Published

on

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த அவரை நடனப்பள்ளியில் சேர்த்து விட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குருப் டான்சராக பணியாற்றிய இவர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் மூலமாக இவருக்கு நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.

#image_title

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடந்த இயக்குனராக மாஸ் காட்டியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காஞ்சனா சீரியஸை தொடர்ந்து இயக்கி வருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா 2 இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

#image_title

நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்படங்களில் நடிப்பது நடன இயக்குனராக மற்றும் இயக்குனராக இருப்பதை தாண்டி பல குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதில் பல குழந்தைகளை வளர்த்து வருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு பீஸ் கட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்து வரும் இவர் தான் சிறு வயது முதல் படிக்க வைத்து தற்போது டிகிரி முடித்திருக்கும் இளைஞரை அறிமுகப்படுத்தி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

#image_title

இவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது இவரது தாய் தன்னிடம் உதவி கேட்டார். நான் அவருக்கு படிப்பதற்கு உதவி செய்தேன். தற்போது அவர் பிஎஸ்சி கணிதம் முடித்து தற்போது தனியார் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எஸ் ஐ ஆக வேண்டும் என்ற கனவை நோக்கி தற்போது உழைத்துக் கொண்டிருக்கின்றார். நான் போட்ட விதை தற்போது மரமாக வளர்ந்து நிற்பதை பார்த்து தனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

Advertisement

இவரின் வெற்றி என்னை மகிழ்ச்சி அடைய செய்கின்றது என்ற அந்த வீடியோவில் பேசியிருந்தார். மேலும் ஒரு குழந்தையை அழைத்து வந்து சிவசக்தியிடம் ஒப்படைத்து இவருக்கு தாய் தந்தை கிடையாது. இந்த சிறுவனுக்கு இனி எல்லாமாக இருந்து பீஸ் அனைத்தையும் கட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கொடுக்க அவரும் மனமாற ஏற்றுக் கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement