LATEST NEWS
பிரியா பவானி, வாணி போஜன் வரிசையில்…. சீரியலில் இருந்து சினிமாவுக்கு தாவிய “கார்த்திகை தீபம்” நடிகை…!!

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் ஆர்த்திகா. தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. காதலர்களின் உறவுகளை புரிந்து கொள்ளும் வகையிலும், சமூக மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படமாகவும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது.

#image_title
இப்படத்தை பி ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பெயர் “வா பகண்டையா”. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் தினேஷ் நடித்திருக்கின்றார். இவருக்கு ஜோடியாக கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் ஆர்த்திகா நடித்திருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அஜித் கோலி மற்றும் யோகிராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

#image_title
அது மட்டும் இல்லாமல் நிழல்கள் ரவி, ஆர் சுந்தர்ராஜன், மீரா கிருஷ்ணன், பவர் ஸ்டார், மனோபாலா, பிளாக் பாண்டி, போண்டாமணி உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.