LATEST NEWS
“கோட்” படத்திலிருந்து சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு…. பாக்கவே செம சூப்பரா இருக்கே…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த மாதம் இறுதியில் படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் படத்திலிருந்து ஒரு மிரட்டலான போஸ்ட் ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

#image_title
இந்த திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரபுதேவா மாஸ்டர் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்று நடிகர் பிரபுதேவாவுக்கு பிறந்தநாள். இவர் இயக்குனர், நடன அமைப்பாளர், ஹீரோ என பல முகம் கொண்டவர். இவரை இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று பலரும் செல்லமாக அழைப்பார்கள்.

#image_title
இவர் விஜயுடன் சேர்ந்து போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடிவரும் பிரபு தேவாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கோட் திரைப்படத்திலிருந்து அவரின் போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கின்றது. இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.