“டீ செலவுக்கு 100 கொடு, 200 கொடு”.. மனசாட்சியே இல்லையா?” மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. இளைஞரின் கண்ணீர் வீடியோ வைரல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டீ செலவுக்கு 100 கொடு, 200 கொடு”.. மனசாட்சியே இல்லையா?” மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. இளைஞரின் கண்ணீர் வீடியோ வைரல்..!!

Published

on

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளைச் சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகக் குற்றம்சாட்டி இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சுவலி சிகிச்சைக்காகத் தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அந்த இளைஞர், ஆம்புலன்ஸில் இருந்து இறங்கியது முதலே டீ செலவுக்குப் பணம் தருமாறும், ஒவ்வொரு முறை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லும்போதும் 100 முதல் 200 ரூபாய் வரை கேட்டு ஊழியர்கள் நச்சரிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

கஷ்டத்துடன் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் மனசாட்சியே இல்லாமல் பணம் பறிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இது குறித்து மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in