“டிசம்பர் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை..” வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பு.. வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிசம்பர் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை..” வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பு.. வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை..!!

Published

on

வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் அல்லது சொத்துகளை வைத்திருந்து, அவற்றை இதுவரை வருமான வரிக் கணக்கில் காட்டத் தவறியவர்களுக்கு உதவும் வகையில் ‘பாஸ்ட்-டிஎஸ்’ எனும் ஒருமுறை சிறப்புத் திட்டத்தை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமலுக்கு வந்த இத்திட்டம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்படி, வெளிநாட்டு வங்கிகளில் ரூ.20 லட்சம் வரை முறையான வருமானத்தின் மூலம் ஈட்டிய பணத்தை வைத்திருப்பவர்கள், உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு அவற்றைக் கணக்கில் காட்டத் தேவையில்லை; மேலும், இதற்காக விதிக்கப்படும் ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் அவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள், இளம் பணியாளர்கள், ஐ.டி ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் இத்திட்டத்தின் மூலம் பெரிய அளவில் பயன்பெற முடியும். அதேசமயம், சட்டவிரோதமாகக் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in