LATEST NEWS
அனுதாப வாக்குகளா? உள்ளூர் செல்வாக்கா? VS பாபு மருத்துவமனையில் இருக்கும்போதே நடந்த ரகசிய மீட்டிங்க்… கொளத்தூர் தொகுதியைத் தட்டித் தூக்கக் காய் நகர்த்தும் தவெக மா.செ..!!
வி.எஸ். பாபு மறைவைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடக் கடும் போட்டி நிலவி வருகிறது. , இத்தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு குறித்த பேச்சுகள் தவெக வட்டாரத்தில் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக, மறைந்த வி.எஸ். பாபுவின் மகனே தவெக வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அனுதாப வாக்குகளையும், தொகுதியில் வி.எஸ். பாபுவுக்கு இருந்த செல்வாக்கையும் கருத்தில் கொண்டு இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேசமயம், கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளரும், தவெக மாவட்டச் செயலாளருமான தணிகாவும் இந்த வேட்பாளர் ரேஸில் தீவிரமாக இருப்பதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வி.எஸ். பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே, தணிகா தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
