LATEST NEWS
“ஒருமுறையாவது அது நடக்கணும்” புற்றுநோயுடன் போராடிய மாணவியின் கண்ணீர் வரவழைக்கும் கடைசி ஆசை… மருத்துவமனையில் ஆசிரியர்கள் செய்த காரியம்… இணையமே நெகிழ்ச்சி..!!
சீனாவைச் சேர்ந்த 18 வயதுடைய யாவ் யிங்பே என்ற மாணவி, கொடிய ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனது இறுதி நாட்களில், பள்ளித் தோழர்களுடன் இணைந்து ஒருமுறையாவது வகுப்பில் அமர்ந்து பாடம் கற்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
மாணவியின் இந்த உருக்கமான விருப்பத்தை அறிந்த அவரது ஆசிரியர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியுடன் அங்கேயே ஒரு தற்காலிக வகுப்பறையை ஏற்பாடு செய்தனர். சக மாணவர்களும் மருத்துவமனைக்கு நேரில் வந்து அவருடன் அமர்ந்து பாடங்களைக் கவனித்து, அவருக்கு மனமகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்தனர்.
தனது வாழ்நாளின் கடைசி ஆசை நிறைவேறிய பூரிப்பில் புன்னகையுடன் வகுப்பில் பங்கேற்ற அந்த மாணவி, அடுத்த இரண்டு நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நெகிழ்ச்சியான மற்றும் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களையும் சமூக வலைதளங்களில் இதனை அறிந்தவர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
