“அந்த கார் வேண்டாம்.. 13 லட்சம் கார் தான் வேணும்..” கடைசி நேரத்தில் தாலி கட்டாமல் திரும்பிச் சென்ற போலீஸ் மாப்பிள்ளை! அதிர்ந்து போன பெண்வீட்டார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த கார் வேண்டாம்.. 13 லட்சம் கார் தான் வேணும்..” கடைசி நேரத்தில் தாலி கட்டாமல் திரும்பிச் சென்ற போலீஸ் மாப்பிள்ளை! அதிர்ந்து போன பெண்வீட்டார்..!!

Published

on

ஹரியானாவின் சோனிபத் பகுதியில் வரதட்சணையாகத் தான் விரும்பிய கார் கிடைக்காததால், டெல்லி காவல்துறையைச் சேர்ந்த குல்தீப் என்ற காவலர் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் திருமணத்திற்காகப் பெண் வீட்டார் சுமார் 9.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹூண்டாய் ஆரா காரை முன்பதிவு செய்திருந்தனர்; ஆனால் திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி பிரெஸ்ஸா கார் வேண்டும் என மாப்பிள்ளை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குறைந்த கால அவகாசத்தில் பிரெஸ்ஸா காரை வாங்கப் பெண் வீட்டார் முயன்றும் அது முடியாமல் போனதால், ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

கார் மட்டுமின்றி, மாப்பிள்ளையின் அண்ணன் மற்றும் அண்ணிக்கும் நகைகள் கேட்கப்பட்டதாகப் பெண்ணின் தந்தை சுபாஷ் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே மாப்பிள்ளைக்கு இரண்டு தோலா தங்கச் செயின், அவரது தாய்க்கு நான்கு தோலா தங்கக் காது வளையங்கள் மற்றும் வெள்ளி கொலுசு தரப் பெண் வீட்டார் தயாராக இருந்ததுடன், மற்ற நகைகளுக்கும் ஆர்டர் கொடுத்து, மரச்சாமான்கள் மற்றும் மாம்சந்த் வாடிகாவில் திருமண ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Advertisement

திருமண நாளன்று ஊர்வலமாக வராமல், தனது தாயுடன் சாதாரண உடையில் திருமண இடத்திற்கு வந்த குல்தீப், முதலில் பிரெஸ்ஸா கார் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா எனக் கேட்டுள்ளார். கார் கிடைக்கவில்லை என்றதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண் வீட்டாரிடம் தவறாகப் பேசியதுடன் பெண்ணின் சகோதரருடனும் தகராறு செய்து, எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் தாயுடன் திரும்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ள நிலையில், மணமகன் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in