LATEST NEWS
அதிர்ச்சி..! மினரல் வாட்டர் என்ற பெயரில் விஷம்..? பிஸ்லெரி தண்ணீரில் புற்றுநோய் ரசாயனங்கள் உறுதி… அதிரடி காட்டிய உணவுப் பாதுகாப்பு ஆணையம்..!!
பிஸ்லெரி பாட்டில் குடிநீரில் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான ரசாயனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக பிஸ்லெரி நிறுவன கிளையிலிருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில் ‘புரோமேட்’ அளவு வரம்பை மீறியிருந்ததால், 2006-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த நீர் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்டப் பரிசோதனையிலும் புற்றுநோயை உண்டாக்கும் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பது உறுதியானதால், இரு ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
