“வீட்டில் பெரியவர்கள் இருக்காங்களா..?” இனி ஆஸ்பத்திரி செலவுக்கு யோசிக்க வேண்டாம்.. முதியவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வீட்டில் பெரியவர்கள் இருக்காங்களா..?” இனி ஆஸ்பத்திரி செலவுக்கு யோசிக்க வேண்டாம்.. முதியவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Published

on

தமிழகத்தில் 70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, த.வெ.க. அரசின் சுகாதாரத்துறை மீதான மானிய கோரிக்கையில், மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் ‘முதல்வரின் முதியோர் காப்பீட்டுத்திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் புற்று நோய், இதய அறுவை சிகிச்சைகள், உயர்தர பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அதில் இடம்பெறாத முதியவர்களும் இந்த காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இ-சேவை மையங்கள்’ மூலமாகவும், அரசு காப்பீடு பதிவு செய்வதற்கான பிற மையங்கள் மூலமாகவும் பயனாளிகள் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

புதிதாக இணையும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.849 என்ற வீதத்தில் காப்பீட்டு தவணைத்தொகை ‘யுனைடெட் இந்தியா’ காப்பீடு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும், தற்போது முதல்-அமைச்சர் காப்பீட்டில் உள்ள அனைத்து மருத்துவ சேவைகளும் முதியோர் காப்பீட்டுத் திட்டத்திலும் செயல்படுத்தப்படும் என்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் முதியவர்கள் பயன் பெறுவார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in