LATEST NEWS
“கண்கலங்க வைக்கும் அவலம்…” பிரசவ வலியுடன் 3 கி.மீ. கரடுமுரடான மலைப்பாதையில் நடந்த கர்ப்பிணி… பிரதான சாலையை எட்டுவதற்குள் நடுவழியில் நடந்த பேரதிர்ச்சி..!!
உத்தரகாண்ட் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான காயத்ரி தேவி என்பவருக்குக் கடந்த சனிக்கிழமை மாலை முதலே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது கணவர், கிராமத் தலைவர் குசும் தேவி மற்றும் ஆஷா பணியாளர் ஆகியோர் சனிக்கிழமை காலை புறப்பட்டனர். ஆனால், அவர்களது கிராமத்திற்குச் சாலை வசதி இல்லாத காரணத்தால், வேறு வழியின்றி கடும் பிரசவ வலியுடன் போராடியபடியே காயத்ரி தேவி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
மருத்துவமனைக்குச் செல்வதற்காகப் பிரதான சாலையை அடைவதற்கு முன்பே, காயத்ரி தேவிக்குப் பிரசவ வலி அதிகமாகி நடுவழியிலேயே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சை மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டிய முக்கியமான தருணத்தில், வெறும் சாலையை அடைவதற்காகவே அவர் கிலோமீட்டர் கணக்கில் நடக்க வேண்டியிருந்தது மிகுந்த வேதனைக்குரியது. எனினும், உடன் இருந்த கிராமத் தலைவர், ஆஷா பணியாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சாதுர்யமாகச் செயல்பட்டுப் பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் பத்திரமாகக் கையாண்டனர்.
குழந்தை பிறந்த பிறகு, தாயும் சேயும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நலமுடன் இருப்பதாகவும், செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் தாயும் குழந்தையும் உயிர் தப்பியது நிம்மதியளித்தாலும், மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான சாலை, மருத்துவம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் போன்ற உரிமைகள் எப்போது முழுமையாகக் கிடைக்கும் என்ற மிக முக்கியமான கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
