LATEST NEWS
த்ரிஷாவே வேண்டாம் என்று மறுத்தாலும் நாங்க விடமாட்டோம்… இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை நிறுவனர் பிடிவாதம்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
நடிகை த்ரிஷா வேண்டாம் என்று மறுத்தாலும், ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ மூலமாக நற்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதன் நிறுவனர் ராஜகோபாலன் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகை த்ரிஷா அரசியலுக்கு வர வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும், இதற்காக அவரை நேரில் சந்தித்துப் பேசத் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பேரவையின் சார்பில் தனது சொந்தச் செலவில் ஏழை எளிய மக்களுக்குக் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் ராஜகோபாலன் குறிப்பிட்டுள்ளார்.
