“ஜன்னல் திறந்திருந்ததைக் கவனிக்காமல்…” அந்தரங்கப் புகைப்படம் வைத்து மிரட்டல்.. காதலியை சமாதானம் பேசுவதாக வரவழைத்து நேர்ந்த பயங்கரம்.. காதலனின் கொடூர வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஜன்னல் திறந்திருந்ததைக் கவனிக்காமல்…” அந்தரங்கப் புகைப்படம் வைத்து மிரட்டல்.. காதலியை சமாதானம் பேசுவதாக வரவழைத்து நேர்ந்த பயங்கரம்.. காதலனின் கொடூர வாக்குமூலம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியைத் தனியார் விடுதியின் மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 26 வயதான சந்தோஷ் குமாரும், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஐஸ்வர்யாவும் ஒரே ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்களது உறவுக்கு ஐஸ்வர்யாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், சந்தோஷ் குமார் திருமணத்திற்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்த பிறகும் தனது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி சந்தோஷ் திருமணத்தைத் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐஸ்வர்யாவுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து சந்தோஷ் அவரை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில், சமாதானம் பேசுவதாகக் கூறி கடந்த நவம்பர் 19-ஆம் தேதி அப்பிகெரே சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு ஐஸ்வர்யாவை மிரட்டி வரவழைத்துள்ளார். அங்கே இருவரும் தங்கியிருந்தபோது மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது; இதில் இரவு சுமார் 7.50 மணியளவில் அந்த விடுதியின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்த ஐஸ்வர்யா, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஐஸ்வர்யாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷ் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜன்னல் திறந்திருந்ததைக் கவனிக்காமல் கோபத்தில் ஐஸ்வர்யாவைத் தள்ளிவிட்டதாகச் சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷ் குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in