CRIME
“அரை நிர்வாணமாக கிடந்த தாயின் சடலம்..” அருகில் கத்தியுடன் நின்ற மகன்.. ன்.. தடயத்தை அழிக்க மருமகள் செய்த அருவருப்பான செயல்.. திடுக்கிடும் பின்ணணி..!!
கோவை மாவட்டத்தில், பெற்ற தாயை மகனே மதுபோதையில் குத்திக் கொலை செய்ததோடு, அந்தக் கொலையை மறைப்பதற்காக மருமகள் சடலத்தின் ஆடைகளைக் களைந்து நாடகமாடிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டத்துவயல் காந்திஜி வீதியைச் சேர்ந்த 60 வயதான மீனாட்சிக்கும், அவரது மகன் அனந்தபாபுவிற்கும் (38) திருமணம் தொடர்பாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் 24-ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் அனந்தபாபுவின் மனைவி கல்பனா (29), மீனாட்சியின் உறவினர்களுக்குப் போன் செய்து, தாம் வீட்டிற்கு வந்தபோது மீனாட்சி ஆடைகளின்றிச் சடலமாகக் கிடந்ததாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீனாட்சி உயிரிழந்ததை உறுதி செய்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அனந்தபாபு மற்றும் கல்பனாவிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்களது பதில்களில் பலத்த முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
சம்பவத்தன்று கல்பனா கோவிலுக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த தாய் மீனாட்சிக்கும் மதுபோதையில் இருந்த மகன் அனந்தபாபுவிற்கும் இடையே வழக்கம் போலக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனந்தபாபு, தாய் மீனாட்சியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு உடலுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தார். அப்போது கோவிலிலிருந்து வீடு திரும்பிய கல்பனா, ரத்த வெள்ளத்தில் கிடந்த மாமியாரின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, கணவனைக் காப்பாற்றவும் கொலைத் தடயங்களை அழிக்கவும் எண்ணி மீனாட்சியின் உடைகளைக் களைந்து விட்டு உறவினர்களுக்குத் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கொலை மற்றும் தடயங்களை அழித்த குற்றத்திற்காக அனந்தபாபு மற்றும் கல்பனா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
