LATEST NEWS
“MRP இல்லாத இடத்தில் இப்படித்தான் இருக்கும் போல…” வெங்காயம் கிலோ ரூ.304, தக்காளி ரூ.202… வெறும் 6 பொருள் வாங்குனதுக்கு ரூ.1,421 பில்லா..? பிரான்சில் ஷாக் ஆன இந்தியப் பெண்..!!
இந்தியாவில் நாம் காய்கறி விற்கும் கடைகளில் 10 ரூபாய்க்குக் கூடப் பேரம் பேசுவோம்; வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு உயர்ந்தாலே பரபரப்பு ஏற்படும். ஆனால், பிரான்சில் வசிக்கும் இந்தியப் பெண்ணான தியா மேத்தா பகிர்ந்துள்ள மளிகை பில் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “MRP இல்லாத உலகில் வாழ்வது” என்ற தலைப்புடன் @diyamehhta என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், பிரான்சில் ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி விலை நிர்ணயம் இருப்பதையும், அங்கு நிலையான MRP முறை இல்லை என்பதையும் காட்டியுள்ளார்.
தியா பிரான்சின் ‘Auchan’ சூப்பர் மார்க்கெட்டில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பூண்டு, அரிசி மற்றும் கோலா ஆகிய 6 பொருட்களை வாங்கியுள்ளார். அங்கு மஞ்சள் மற்றும் சிவப்பு என இரு வகை வெங்காயங்கள் இருந்த நிலையில், சிவப்பு வெங்காயத்தைத் தேர்ந்தெடுத்த அவருக்குப் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட வெங்காயம் கிலோ சுமார் 273 ரூபாய்க்கும், திறந்த வெங்காயம் கிலோ சுமார் 304 ரூபாய்க்கும் விற்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து உருளைக்கிழங்கு சுமார் 100 ரூபாய்க்கும், தக்காளி கிலோ சுமார் 202 ரூபாய்க்கும், 500 கிராம் பூண்டு சுமார் 203 ரூபாய்க்கும், 1 கிலோ பாசுமதி அரிசி பாக்கெட் 2.88 யூரோ (சுமார் 292 ரூபாய்) விலையிலும் இருந்துள்ளன; மேலும் சூப்பர் மார்க்கெட்டின் சொந்தக் கோலா சுமார் 54 ரூபாய்க்கும், அசல் கோகோ கோலா 1.50 யூரோ (சுமார் 152 ரூபாய்) விலையிலும் இருந்ததில் அவர் கோகோ கோலாவை வாங்கியுள்ளார்.
https://www.instagram.com/reel/DgIcS5jsZAS/?utm_source=ig_web_button_share_sheet
மொத்தமாக இந்த 6 பொருட்களுக்கும் 14 யூரோ, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,421 ரூபாய் பில் வந்துள்ளது; இந்தியாவில் இத்தொகையில் ஒரு வாரத்திற்கான காய்கறிகள் வாங்க முடியும் என்பதால் பலரும் ஆச்சரியமடைந்தனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவில் காய்கறி விலை பரவாயில்லை என்று சிலரும், பிரான்சில் வருமானமும் அதிகமாக இருப்பதால் வெறும் ரூபாய்க்கு மாற்றிப் பார்க்கக் கூடாது என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
