CRIME
“உங்க அப்பா வேணும்னா 30 லட்சம் கொடு..!” ஒரு மாதமாக மாயமான முதியவர்.. திடீரென குடும்பத்தினருக்கு வந்த அந்த ஒரு போன் கால்.. மர்ம கும்பல் போட்ட பகீர் டிமாண்ட்.. கண்ணீருடன் போராடும் மகள்..!!
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் அமீனாபாத் கோட்வாலிபகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி மாயமான முதியவர் ராம் நாராயண் பாஜ்பாய் வழக்கில், காவல்துறையினர் தற்போது கடத்தல் பிரிவுகளின் கீழ் புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். தனது தந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கடத்தப்பட்ட முதியவரை விடுவிக்கக் கோரி, வெவ்வேறு நபர்கள் மூலமாகத் தங்களது குடும்பத்தினரிடம் மொத்தம் 30 லட்சம் ரூபாய் பிணைத் தொகையாகக் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலம்பாக் பகுதியைச் சேர்ந்த முதியவரின் மகள் ஆஞ்சல் பாஜ்பாய் பதக் அளித்த புகாரின் அடிப்படையில், நவம்பர் 22-ஆம் தேதி இரவு காவல்துறையினர் இந்தப் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
தனது தந்தை மாயமாகி ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இதுவரை அவர் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என அவரது மகள் ஆஞ்சல் பாஜ்பாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், ஆரம்பக் கட்டத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் குடும்பத்தினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதியவரை மீட்கவும் கடத்தல்காரர்களைப் பிடிக்கவும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
