CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா…?” 2 ஆண்டுகளாகச் சொந்த சகோதரனே செய்த வெறிச்செயல்.. யாரும் நம்பாததால் அறையில் பென் கேமரா வைத்து வீடியோ ஆதாரம் திரட்டிய 22 வயது இளம்பெண்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் தனது சொந்த சகோதரனே தன்னை இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 22 வயது இளம்பெண் அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாயூன் மாவட்டத்தின் தாதாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது சகோதரன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டித் தன்னைத் தொடர்ந்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமை குறித்துப் பெற்றோரிடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் அவர் தெரிவித்தபோதும், யாரும் அவரது வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை.
இதனையடுத்து, உண்மையை நிரூபிக்க முடிவு செய்த அந்த இளம்பெண், அறையில் ரகசியமாக ‘பென் கேமரா’ ஒன்றை மறைத்து வைத்துத் தனது சகோதரனின் அத்துமீறல்களை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். ஆனால், அந்த வீடியோ ஆதாரத்தைப் பார்த்த பிறகும் கூட, மகன் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகப் பெற்றோர்கள் மகளையே வீட்டிற்குள் சிறை வைத்ததுடன், அவர் பார்த்து வந்த வேலையிலிருந்தும் நீக்கச் செய்ததாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீட்டிற்குள் முடக்கப்பட்ட அந்தப் பெண், சாக்ஷி மிஸ்ரா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவியின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, அவரது துணையுடன் பெற்றோரின் வீட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட சகோதரனைக் கைது செய்துள்ளனர்; மேலும், பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்ட அந்த இளம்பெண், பரேலியிலேயே தங்கித் தனது பணியைத் தொடர முடிவு செய்துள்ளார்.
