வருங்கால மனைவியுடன் போட்டோ….! நல்ல செய்தி சொன்ன ஹரிஷ் கல்யாண்….. விரைவில் டும் டும் டும்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வருங்கால மனைவியுடன் போட்டோ….! நல்ல செய்தி சொன்ன ஹரிஷ் கல்யாண்….. விரைவில் டும் டும் டும்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக, ஜாமிங் பாயாக வளம் பெறுபவர் ஹரிஷ் கல்யாண்.  சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவருக்கு அந்த திரைப்படம் அந்த அளவுக்கு புகழை கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் மக்களின் ஆதரவை பெறத் தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறிது நாட்கள் இருந்தாலும் பெருவாரியான ஆதரவு இவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாலரான ரைசா வில்சன் உடன் இவருக்கு காதல் இருப்பதாக தகவல் வெளிவந்தது. அதேபோல இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளிவந்த பிறகும் ஒரு படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இது தொடர்பாக இவர்கள் இருவரும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காத காரணத்தினால் அதுதான் உண்மை என்று பலரும் தெரிவித்து வந்தனர்.

Advertisement

அதைத்தொடர்ந்து ஹரிஷ் வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது விஜயதசமி நாளில் புதிய துவக்கம் என்ற பெயரில் ஒரு பெண்ணுடன் கைகோர்த்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை வெளியிட்ட சிறிது நேரத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டு இருந்தார். அதாவது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள் பத்திரிக்கை நண்பர்கள் எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து அவருடன் இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in