மனைவி கொடுத்த புகார்…..! கைதாகிறார் பிரபல நடிகர்…… போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவி கொடுத்த புகார்…..! கைதாகிறார் பிரபல நடிகர்…… போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்…..!!!!

Published

on

செவ்வந்தி எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்த வருபவர் நடிகை திவ்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே வீட்டில் இரண்டு வருடங்களாக வசித்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் அர்னவ் கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், இதனால் எந்த நேரத்திலும் எனது கரு கலையலாம் என்று நடிகை திவ்யா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்திருந்தார். பதிலுக்கு அர்னவ் மனைவி திவ்யா மீது தனது தரப்பு நான் நியாயங்களை கூறி புகார் அளித்து வருகிறார்.

Advertisement

இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் அளித்து வரும் நிலையில் அர்னவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அர்னவை நேரில் ஆஜராக வலியுறுத்தியுள்ளன. மேலும் அதில் என்னை முஸ்லிம் மதத்திற்கு மாற வைத்து திருமணம் செய்து கர்ப்பமான பின்னர் என்னை அர்னவ் விட்டுவிட்டார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது இவர்களின் சண்டை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் திவ்யா கர்நாடகவை சேர்ந்தவர் என்பதால் கர்நாடக மாநில ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றது. கர்நாடகாவின் தலையீடு இருப்பதால் தமிழக போலீசும் இந்த விவகாரத்தை சீரியஸாக அணுகி வருகின்றது. விரைவில் அர்னவ் கைது செய்யப்படுவார் என்று திவ்யாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in