LATEST NEWS
பிக்பாஸ் வீட்டில் இருந்து….. முதல் ஆளாக நடையை கட்டப் போவது இவர்தான்…. வெளியான தகவல்….!!!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இவர்தான் முதலில் வெளியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசனை விட இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஏனென்றால் கடந்த முறை 15, 16 போட்டியாளர்கள் வந்த நிலையில் தற்போது 20 போட்டியாளர்களை களம் இறக்கியுள்ளது விஜய் டிவி. அது மட்டும் இல்லாமல் வந்த முதல் நாளே டாஸ்கை வைத்து நான்கு பேரை வீட்டிற்கு வெளியே படுக்க வைத்துள்ளது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து வழக்கம் போல் தனிதனி லக்சரி பாயிண்ட்ஸ், வீடு சுத்தம் செய்பவர்கள், பாத்திரம் சுத்தம் செய்பவர்கள், பாத்ரூம் சுத்தம் செய்பவர்கள், சமைப்பவர்கள் என்று தனி தனி கிளப்பாக பிரிக்கப்பட்டு தலைவர் தேர்வு செய்யக்கூட தனிதனி டாஸ்க் வைக்கப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் பிக்பாஸ் 6 மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் துவங்கும் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்த்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் தற்போதே வீட்டில் சண்டை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஜிபி முத்துவை வைத்து பலரும் விளையாடி வருகிறார்கள்.
அதிலும் தனலட்சுமி வசமாக சிக்கியுள்ளார். ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பலரும் அவரை திட்டி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சமையல் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி இடமும் தேவையில்லாமல் வைத்து அவரிடமும் வாங்கி கட்டிக்கொண்டார் தனலட்சுமி.
இந்த வாரம் எலிமினேஷன் இல்லாவிட்டாலும் அடுத்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால் முதல் வாரமே அவர்தான் வீட்டை விட்டு வெளியே போவார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். ஜி பி முத்துவிடம் பிடித்தது அவருடைய வெள்ளந்தியாக பேசும் குணம் தான். ஆனால் பலருக்கும் அது வீட்டிற்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திகின்றது.
