“வெளிய போறதுக்கு ரெடியா இருங்க, கமல் சார் குறும்படம் போடுவார்”…. விக்ரமனுக்கு பிக்பாஸ் வீட்டில் அசீம் வைத்த செக்…..!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

“வெளிய போறதுக்கு ரெடியா இருங்க, கமல் சார் குறும்படம் போடுவார்”…. விக்ரமனுக்கு பிக்பாஸ் வீட்டில் அசீம் வைத்த செக்…..!!!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என கமல்ஹாசன் கோபமாக கூறிய நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓரளவு போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் இந்த வாரம் அசீம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் இவரின் அட்டகாசம் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருக்கின்றது. ஏலியன்ஸ் மற்றும் பழங்குடியின மக்கள் என அவதார் பட கான்செப்டில் இந்த வாரம் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அசீம் இதில் நடந்து கொள்ளும் விதம் சிலரை மகிழ்வித்தாலும் பலரை கோபமடைய வைத்துள்ளது. இந்நிலையில் நேற்று அசீம் பிக் பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் அவரை அனைவரும் உள்ளே படுக்க வைத்தனர். அதன் பிறகு அவர் காலையில் எழுந்ததும் பூக்களை திருடி விட்டனர்.

Advertisement

இதனால் போட்டியாளர்கள் தொடர்ந்து விளையாட முடியாமல் இருந்தனர். இதனிடையே அமுதவாணன், அசீம் அடித்து விட்டதாக கூறியதால் சக போட்டியாளர்களும் அதனை நம்பி அசீமை கடுமையாக திட்டினர். ஒரு கட்டத்தில் அசீம் அடித்ததை தான் பார்த்ததாக விக்ரமன் கூறியுள்ளார். அதனால் டாஸ்க் முடிவடைந்ததும் அசீம், விக்ரமனிடம் கமல் சார் எபிசோடில் குறும்படம் போடுவாங்க வெளிய போறதுக்கு நீங்க ரெடியா இருங்க என கூறிய நிலையில் விக்கிரமன் அமைதியாக உள்ளார். எனவே இந்த வாரம் ஒரு குறும்படம் இருப்பது உறுதியாகியுள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in