LATEST NEWS
நடிகர் விக்ரமுக்கு இவ்வளவு அழகான மகளா?….. அதுவும் யாருடன் இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம்.ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர் எப்போதுமே ரசிகர்களுடன் ஜாலியாக தான் இருப்பார்.எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு மேடையே கலகலத்து விடும். தனது ரசிகர்களுடன் சகஜமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைப் போலவே அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இவரின் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விக்ரமைப் போல அவரின் மகன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மகன் துருவ் விக்ரம் என்பதை பலரும் அறிந்திருப்போம். விக்ரமுக்கு ஒரு மகளும் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
