திருமணம் முடிந்த 5 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன நிக்கி கல்ராணி – ஆதி தம்பதி…. ரசிகர்கள் வாழ்த்து….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் முடிந்த 5 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன நிக்கி கல்ராணி – ஆதி தம்பதி…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிக குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஆதி. மிருகம் திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.அடுத்தடுத்து ஈரம் மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார்.அதனைப் போலவே நடிகை நிக்கி கல்ராணி வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இதனிடையே பல படங்களில் ஒன்றாக நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கடந்த மே மாதம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே இவர்களுக்கு திருமணம் முடிந்து கலிபோர்னியாவுக்கு ஹனிமூன் சென்றனர்.

Advertisement

அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இருவரும்  அண்மையில் தங்களின் நூறாவது திருமண நாளை பிரான்ஸ் நாட்டில் கொண்டாடினர். இந்நிலையில் தற்போது நடிகை நீக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பெற்றோர்கள் ஆக இருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in