இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இந்த பிரபலமா?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இந்த பிரபலமா?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார்.  தினம்தோறும் சண்டை, காதல், கிசுகிசு, கலாட்டா மற்றும் சிரிப்பு என அனைத்தும் கலந்த கலவையாக பிக் பாஸ் வீடு தற்போது உள்ளது. இதனைத் தொடர்ந்து அரண்மனை டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் செம ஜாலியாக பிக் பாஸ் வீடு மாறி உள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்காக அசீம், ஜனனி, கதிரவன், தனலட்சுமி, குயின் சி, ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா மற்றும் நிபாஷினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் அசீம் மற்றும் ஜனனி முதல் இரண்டு இடத்தில் இருக்க ராபர்ட், ஆயிஷா மற்றும் நிவாஸினி மூன்று பேரும் இறுதி இடத்தில் உள்ளனர். இவர்கள் மூன்று பேரில் நிவாஷினி வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in