LATEST NEWS
5 வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை திடீரென சந்திக்கும் விஜய்…. காரணம் என்ன?…. தீயாய் பரவும் செய்தி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் தெலுங்கில் பெரியாவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு திரை உலகில் பொங்கலுக்கு ஆந்திராவில் வெளியாகும் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும் நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ் திரையுலகை சார்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து.
இதனால் வாரிசு திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களை திடீரென சந்திக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு விஜய் திடீரென ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
