LATEST NEWS
ஒத்த விளம்பரத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?…. நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் லவ் டுடே நடிகை இவானா….!!!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த வருடம் கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இவானா, சத்யராஜ் மற்றும் ராதிகா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 90 கோடி வசூல் செய்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் இவானா. இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.
தற்போது ஹரிஷ் கல்யாண்வுடன் ஒரு திரைப்படத்தில் 35 லட்சம் சம்பளத்திற்காக நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து பாண்ஸ் பவுடர் விளம்பரத்திற்காக இவ்வாறா சுமார் 1.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் நான்கு விளம்பரங்களில் நடிப்பதற்காக நான்கு கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா கூட இப்படி ஒரு சம்பளத்தை பெற முடியாத நிலையில் இவானா மார்க்கெட் தற்போது எகிரியுள்ளது.
