LATEST NEWS
“என்ன கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க”…. நயன் – விக்கி செயலால் வருத்தப்பட்ட பிக்பாஸ் ஜிபி முத்து…. அப்படி என்ன நடந்தது….????
டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜிபி முத்து என் ஜாய் என்ற திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நடிகை நயன்தாரா நடித்த கணக்கு திரைப்படத்தின் பிரீ ரிலீசுக்கு என்னை அழைத்தார்கள். நயன்தாரா என்னை பார்க்க விரும்புவதாக கூறினர். அதனால் நான் ஃப்ரீ ரிலீஸ் க்கு சென்றேன். ஆனால் அங்கு தன்னை தரை குறைவாக நடத்தினார்கள்.
நயன்தாரா பக்கமே பவுன்சர்கள் என்னை விடவில்லை. இதனைத் தெரிந்து விக்னேஷ் சிவன் எனக்கு கால் செய்து கூப்பிட்டார். ஆனால் மற்றொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் கூறிவிட்டு வெளியேறி விட்டேன். படத்தை நான் பார்க்கவில்லை. நயன்தாராவுக்கு இதெல்லாம் தெரியாது என்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தான் இந்த தவறை செய்ததாகவும் ஜி பி முத்து தெரிவித்துள்ளார்.
