“எங்க பிரிவுக்கு இது மட்டும் தான் காரணம்”…. பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகர் ராமராஜன் முன்னாள் மனைவி நளினி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க பிரிவுக்கு இது மட்டும் தான் காரணம்”…. பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகர் ராமராஜன் முன்னாள் மனைவி நளினி….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து இருக்கும் நடிகர் தான் ராமராஜன். கரகாட்டக்காரன் திரைப்படம் தற்போதும் டிவியில் ஒளிபரப்பாகினால் அதனை பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ராமராஜன் ஹீரோவாக மட்டுமல்லாமல் பல படங்களையும் இயக்கியுள்ளார்.மதுரை வேலூரில் இருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த இவர் நாராயணசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்த நிலையில் அவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கினார். பிறகு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதால் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக பலம் வந்தார். இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் ராமராஜன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நளினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். அதில், நான் திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பின்னர் என்னுடைய தாய் ஜோசியம் பார்க்க என்னை அழைத்துச் சென்றார். அப்போது ஜாதகத்தில் நான் திருமணம் ஆகி சில வருடங்களில் பிரிந்து விடுவேன் என்று கூறினார்கள். இதனை பலரும் பேசினர். அதன் காரணமாக சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதற்காக நாங்களே சந்தோசமாக பிரிந்து விட்டோம் என்று நளினி கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in