VIDEOS
சபரிமலை யாத்திரை சென்ற குக் வித் கோமாளி புகழ்….. கூட யார் போனாங்க தெரியுமா?…. வைரலாகும் வீடியோ….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இதனிடையே புகழ் பென்ஸி என்ற பெண்ணை ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் புகார் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி யாத்திரை சென்று உள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. புகழுடன் சேர்ந்து சக்தியும் சபரிமலைக்கு கன்னி சாமியாக சென்றுள்ளார் என குக் வித் கோமாளி புகழ் ரித்திகா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
