“என் பெயரில் வெளியான தவறான வீடியோ”…. மனம் வருந்தி புலம்பிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா…. வீடியோ (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

“என் பெயரில் வெளியான தவறான வீடியோ”…. மனம் வருந்தி புலம்பிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா…. வீடியோ (உள்ளே)….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த திரைப்படத்தில் சூரியின்  மனைவியாக நடித்த ரேஷ்மா இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரேஷ்மா, உன் பெயரை வைத்து அந்த மாதிரி வீடியோ லீக் ஆகியுள்ளது என்று என் சகோதரி கூறினார்.

Advertisement

அப்போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அப்போது அமெரிக்காவில் இருந்த போதே இந்த வீடியோ சம்பவம் என்னுடைய பெற்றோருக்கு தெரியவந்தது. என் குடும்பமே ஒரு சினிமா பின்னணியை சேர்ந்தவர்கள். என்னுடைய பெயரில் வெளிவந்த ஆபாச படம் மார்டின் செய்யப்பட்டது என எழுதி ல அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு நடந்தது போல சாதாரண மக்கள் யாருக்காவது நடந்திருந்தால் அவர்கள் கட்டாயம் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ரேஷ்மா கூறிய நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/Vishnu1310/status/1608406178287190018

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in