LATEST NEWS
தளபதி விஜய்யின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா?…. முதல்முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 40 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் விஜய்க்கும் அவரின் மனைவி சங்கீதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. விஜய் மற்றும் சங்கீதா தம்பதிக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் விஜயின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சங்கீதாவின் தாய் தந்தையும் உள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
