நடிகர் நரேனின் திருமணத்தில் கலந்து கொண்ட தளபதி விஜய்…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம் உள்ளே….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் நரேனின் திருமணத்தில் கலந்து கொண்ட தளபதி விஜய்…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம் உள்ளே….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் நரேன்.இவர் நிழல் குத்து என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் தனது திறமையான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். அதனால் தமிழில் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இவரை ஹீரோ ஆக்கினார் மிஷ்கின்.

அதுதான் அவரின் முதல் திரைப்படம்.தமிழில் அந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி இவர் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை,பள்ளிக்கூடம் மற்றும் அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன.

Advertisement

இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் தமிழில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. இருந்தாலும் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அசத்தி இருந்தார்.

இதனிடையே நரேன் கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தன்மயா என்ற ஒரு மகளும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு  முன்பு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நரேணின் திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in