LATEST NEWS
கண்ணீர் வரவழைக்கும் பதிவை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்…. பார்த்ததும் கலங்கிய ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பாலா இடம்பெறவில்லை. கோமாளியாக இருந்த சிவாங்கி குக்காக மாறியுள்ளார். இருந்தாலும் கடந்த சீசனில் அதிகமாக இடம்பெறாத புகழ் தற்போது நான்காவது சீசனில் முழுமையாக கோமாளியாக ஈடுபட்டு வருகிறார்.
சினிமாவிலும் வலிமை,எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் புகழ் நடிப்பில் வெளியான நிலையில் தற்போது காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்தில் சிவாங்கியுடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்நிறையில் புகழ் தற்போது கண்ணீர் வரவழைக்கும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது வடிவேல் பாலாஜி மாதிரி வேடமிட்டு அவர் பகிர்ந்து உள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
