LATEST NEWS
நொடி பொழுதில் சில்க் ஸ்மிதாவாக மாறிய கீர்த்தி சுரேஷ்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி பிஸியான நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் சில்க் சுமிதாவை நினைவுபடுத்தும் வகையில் ஒரு போஸ்டர் முன் நின்று கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
