LATEST NEWS
நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு வந்த புது உறவு…. முதல் நாளே வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர் ஷாம்னா காசிம். பின்னர் சினிமாவிற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.
இவர் முதல் முதலாக நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
அதை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் ஆடு புள்ளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான தலைவி, திரிஷ்யம், அகண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இறுதியாக தமிழில் தலைவி மற்றும் விசிதிரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார்.
அதேசமயம் கர்ப்பமாக இருக்கும் போது பல போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து அதனை பகிர்ந்த இவர் வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
இந்நிலையில் இவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் நாங்கள் ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளோம் என்றும் எங்களுக்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
