பிரபல பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

Published

on

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகம பா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபலங்கள் பலரும் உள்ளனர்.

அந்த வரிசையில் வயதான பிறகும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் தான் ரமணியம்மாள். இவருக்கு ராக்ஸ்டார் ரமணி அம்மாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

Advertisement

இவரின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் அடிமை. அதிலும் குறிப்பாக இவரின் நாட்டுப்புற பாடல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். நாட்டுப்புற பாடல்கள் மூலம் பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இவர் தமிழில் வெளியான காத்தவராயன் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகையாக முதல் முதலில் அறிமுகமானார். அதன் பிறகு ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2 மற்றும் நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் பாடல்களையும் பாடியுள்ளார்.

Advertisement

இப்படி பல புகழுக்குரிய இவர் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in