LATEST NEWS
திரையுலகில் அறிமுகமாகும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள்…. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?… வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் பின்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளன.
அதில் முதல் மகன் தான் வெங்கட் பிரபு. அவரின் இளைய மகன் பிரேம்ஜி சினிமாவில் காமெடி நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவரின் மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகர், இயக்குனர்,பின்னணி பாடகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
கங்கை அமரனின் மகன் என்று அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த இவர் தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
இவர் இயக்கிய மாநாடு மற்றும் மன்மத லீலை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
தற்போது இவர் தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்திற்குத் ‘கஸ்டடி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே வெங்கட் பிரபுவிற்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஷிவானி தெலுங்கு படமான ‘கஸ்டடி’-க்கு பாடலாசிரியராக மாறி இருக்கிறார். இவர் எழுதிய பாடல் வரும் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
