இந்த மனசு யாருக்கு வரும்…. 150 குழந்தைகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த உதவி…. ரசிகர்கள் வாழ்த்து…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த மனசு யாருக்கு வரும்…. 150 குழந்தைகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த உதவி…. ரசிகர்கள் வாழ்த்து…!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை ராகவா லாரன்ஸ் எந்த ஒரு படத்திலும் மாஸ்டர் சிக்ஸ் பேக் போல உடம்பை வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து நடித்ததே இல்லை.

Advertisement

ஆனால் தற்போது முதன்முறையாக இயக்குனர் வாசி இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக இப்படி மாறி உள்ளார்.

சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார்.

Advertisement

அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்.

இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன.  இவர் தன்னுடைய தாய்க்காக கோவிலும் காட்டியுள்ளார்.

Advertisement

இவ்வாறு சினிமாவிலும் சமூகத்திலும் பிசியாக இருந்து வரும் இவர் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ராகவி என்ற மகள் இருக்கிறார்.

இவரின் நடிப்பில் வருகின்ற தமிழ் புத்தாண்டுக்கு ருத்ரன் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் பாலா குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதை அறிந்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு சுமார் பத்து லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார்.

அவரின் இந்த செயல் நிகழ்ச்சிக்கு வந்த பலரையும் வியக்க வைத்தது. ராகவா லாரன்ஸ் பொதுவாக இறக்க குணம் கொண்டவர் என்பதை அனைவரும் அறிந்தது தான்.

Advertisement

இவர் தத்தெடுக்கும் மனிதர்களின் இவரின் திரைப்படங்களில் சில சில இடங்களில் வந்து விட்டு செல்வார்கள். இதனைப் போலவே பாலாவையும் இனிவரும் திரைப்படங்களில் எதிர்பார்க்கலாம்.

இதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் சுமார் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என ட்விட்டரில் ஒரு பதிவை ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in