LATEST NEWS
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சிறுவயது புகைப்படங்களை பார்த்து உள்ளீர்களா?…. இதோ சில அரிய புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் உள்ளனர். அப்படி சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் ஜெயிலர், விஜய் நடிப்பில் லியோ, அஜித் நடிப்பில் ஏகே 62, சூர்யா நடிப்பில் வணங்கான், கமல் நடிப்பில் இந்தியன் 2 என அடுத்தடுத்து பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சிலவற்றை இதில் பார்க்கலாம்.
நடிகர் ரஜினி:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் கமல்:
உலக நாயகன் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
நடிகர் விஜய்:
சினிமாவில் நடிகராக திகழும் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
நடிகர் அஜித்:
தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் தான் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா, கார்த்தி:
90களில் கலக்கிய முன்னணி நடிகரான சிவகுமாரின் மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சூர்யா நடிப்பில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் விக்ரம்:
90களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர் தான் விக்ரம். இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றி பெற விட்டாலும் தற்போது இவர் நடித்து வரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இவர் தற்போது பொன்னின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் தனுஷ்:
தமிழ் சினிமா தொடங்கி பாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தான் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி:
சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த மிரட்டி வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் இறுதியாக வெற்றி மரம் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி இருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
நடிகர் சிம்பு:
முன்னணி நடிகரான டி. ராஜேந்திரனின் மகன் தான் சிம்பு. இவர் 90களில் தனது தந்தையுடன் இணைந்து குழந்தை கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்:
தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது குழந்தைகளின் பேவரைட் ஹீரோவாக உள்ளார். அதே சமயம் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
நடிகர் ஆர்யா:
சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் சில துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்யா தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
