இந்த மனசு யாருக்கு வரும்…. ஏர்போர்ட்டில் பெண்ணுக்கு உதவிய நடிகர் அஜித்…. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த மனசு யாருக்கு வரும்…. ஏர்போர்ட்டில் பெண்ணுக்கு உதவிய நடிகர் அஜித்…. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சமீபத்தில் அஜித் நடித்த வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலகினார். இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மயில் திருமேனி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்டது.

Advertisement

ஆனால் இதுவரை இப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஏர்போர்ட்டில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு அஜித் செய்த உதவி பற்றி அந்தப் பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில், ஸ்காட்லாந்தின் glasgowஎன்ற நகரில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் ஏறுவதற்காக அந்த பெண் காத்திருந்த போது அஜித்தை பார்த்து செல்பி கேட்டிருக்கிறார். அப்போது அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்ட அஜீத் அந்தப் பெண் வைத்திருந்த குழந்தையின் பையை தான் தூக்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

Advertisement

வேண்டாம் என்று அந்தப் பெண் கூறினாலும் எனக்கும் இரண்டு குழந்தை இருக்கு எனக்கு புரியும் என அஜித் கூறியுள்ளார். விமானத்தில் ஏறி அந்த பையை விமான பணியாளரிடம் கொடுத்து அந்தப் பெண் இருக்கைக்கு மேலே வைக்க கூறியுள்ளார். இந்த அளவிற்கு அஜித் செய்த உதவி பற்றி நிகழ்ச்சியுடன் அந்த நபர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in