LATEST NEWS
மகள் இறந்து 12 வருடங்களுக்குப் பிறகு…. மனம் உருக பதிவு போட்டு ரசிகர்களை கலங்க வைத்த பாடகி சித்ரா….!!!
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 25,000 மேற்பட்ட பாடல்களை பாடியவர் சின்னக்குயில் சித்ரா. சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பாடிவரும் இவர் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். பிரபல பாடகியான இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவரின் இனிமையான குரலுக்கு மயியாதவர்கள் யாருமே கிடையாது. இதுவரை ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் பாடிய மலர்கள் கேட்டேன், கொஞ்சி பேசிட வேணாம் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
பல்வேறு புகழுக்குரிய இவர் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில வருடங்களில் இவர்களுக்கு நந்தனா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அந்த குழந்தை எதிர்பாராமல் உயிரிழந்தது. அதாவது சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்றிலிருந்து சித்ரா தனது மகள் பெயரில் நிறைய குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். நேற்று அவர் மகளை நினைவு நாள் வந்துள்ளது. அதனால் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு பாடகி சித்தராய் எமோஷனல் பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவுக்கு ரசிகர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
