LATEST NEWS
நடிகர் ஜெகன் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்…. உருக்கமான பதிவுடன் கவலையை பகிர்ந்த ஜெகன்…. ரசிகர்கள் ஆறுதல்….!!!
தமிழ் சின்னத்திரையில் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ஜெகன். வெள்ளி திரைகளும் பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சிறந்த காமெடி நடிகராக அடையாளம் காட்டியது சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த அயன் திரைப்படம் தான்.
அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். சில நேரங்களில் இவர் நிகழ்ச்சிகளில் பேசும் வார்த்தை இரட்டை அர்த்தம் கொண்டதாகவும் இருக்கும்.இவர் கோ, கவண் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் என்பதைவிட விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இவருக்கு திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது. இவர் பல பேட்டிகளில் தன் மனைவி வான்மதியுடன் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ஜெகனின் தாயார் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெகன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் தாயார் மரணம் அடைந்துள்ளார் என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஜெகனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
