46 வயதிலும் சிக்குனு சின்ன பொண்ணு போல இருக்கும் நடிகை மீனா…. பட்டுப் புடவையில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

46 வயதிலும் சிக்குனு சின்ன பொண்ணு போல இருக்கும் நடிகை மீனா…. பட்டுப் புடவையில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.

அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Advertisement

இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இதனிடையே கடந்த வருடம் ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

Advertisement

அவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு கணவர் மரணத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மீனாவை அவரின் தோழிகள் தான் வெளியே கொண்டு வந்து தேற்றினர்.

சமீபத்தில் கூட நடிகை மீனா திரையுலகில் வெற்றிகரமாக 40 வருடங்கள் நிறைவு செய்ததற்கு மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது.

Advertisement

இதனிடையே இணையத்தில் தற்போது ஆக்டிவாக இருந்து வரும் மீனா அடிக்கடி தனது மகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மீனா தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பட்டுப்புடவையில் ஜிமிக்கி கம்மல் உடன் ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in