குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின்…. ஒரு எபிசோடு சம்பளம் எவ்வளவு தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க….;!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின்…. ஒரு எபிசோடு சம்பளம் எவ்வளவு தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க….;!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாகவும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் அனைவரும் செய்யும். சேட்டைகளை பார்த்து ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட்டு ஆகியோர் நடுவர்களாகவும், காமெடியை கூறி ரசிகர்களையும் குஷிப் படுத்தி வருகிறார்கள்.

Advertisement

வாரத்தின் இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நான்காவது சீசனில் விசித்ரா, ஷெரின், மைம் கோபி, கிஷோர், காளையன், சிவாங்கி, ராஜ் ஐயப்பா, ஆண்ட்ரியான் மற்றும் சிருஷ்டி டாங்கோ ஆகியோர் குக்காக உள்ளனர். இதில் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி 90களில் மடிப்பு அம்சா என்ற அடையாளத்தோடு கொடிகட்டி பறந்த நடிகை விசித்ராவுக்கு 30,000 ரூபாய் வரை ஒரு எபிசோடுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

Advertisement

மூன்று சீசனாக கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது இந்த சீசனில் குக்காக உள்ளார். இவருக்கு ஒரு எபிசோடுக்கு இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

பிரஞ்சு நடிகை ஆன்டிரியாவுக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

Advertisement

விஜே விஷாலுக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஒரு எபிசோடுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

சிருஷ்டி டாங்கேவுக்கு ஒரு எபிசோடுக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

Advertisement


ராஜ் ஐயப்பாவுக்கு 26 ஆயிரம் ரூபாய் வரை ஒரு எபிசோடுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது.

அதனைப் போலவே மைக் கோபிக்கு ஒரு எபிசோடுக்கு 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகையான ஷெரினுக்கு இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in