LATEST NEWS
சிட்டாடல் ப்ரொமோஷனுக்காக லண்டன் சென்ற நடிகை சமந்தா…. இணையத்தை கலக்கும் வேற லெவல் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார்.
இவரின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற சிட்டாடல் வெப் தொடர் வருகின்ற 28ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
இதில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேனன், ஸ்டாலின் துச்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த தொடர் தற்போது ஆங்கிலத்தில் தயாராகி இருந்தாலும் இதே தொடர் உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகின்றது.
அதன்படி ஹிந்தியில் ரீமைக்காகவும் இந்த தொடரில் சமந்தாவும் வருண் தவானும் நடிக்கிறார்கள். இந்நிலையில் சிட்டாடல் தொடரின் பிரீமியர் ஷோ லண்டனில் திரையிடப்பட்டது.
இதில் பங்கேற்க உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் லண்டனில் குவிந்தனர்.
அதன்படி இந்தியாவில் இருந்து சமந்தா மற்றும் வருந்தவான் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் சமந்தா இதுவரை இல்லாத லுக்கில் புதுவிதமாக காட்சியளித்துள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
